மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
இதே போல் தற்போது தமிழ்நாட்டில் கரோனா 144 தடை உத்தரவு உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி தடைபடாமல் வழக்கம் போல் வருகிற 2021ஆம் ஆண்டிலும் போட்டி நடைபெற வேண்டும், அதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், அரசு கூறும் வழிகாட்டுதல்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியான முறையில் தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் வாடிப்பட்டி துணை வட்டாட்சியர் வனிதாவிடம் மனு அளித்து சென்றனர்.