தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மத்திய சிறை அருகே குப்பைத்தொட்டிக்குள் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு - குப்பைத்தொட்டியில் கையடக்க துப்பாக்கி

மதுரை மத்திய சிறைச்சாலை அருகே குப்பைத் தொட்டிக்குள் துப்பாக்கி கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி
துப்பாக்கி

By

Published : Aug 2, 2022, 1:11 PM IST

மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே உள்ள குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் இன்று (ஆக.2) தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். .

இதுதொடர்பாக கரிமேடு காவல் நிலையத்திற்கும் சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: புகார் அளித்து 2 வருடம் ஆகியும் விசாரணை நிலுவையில் உள்ளது எனக்கூறுவதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

ABOUT THE AUTHOR

...view details