தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் என்ற லட்சுமி நாராயணன். இவர், காமி நேனி எனும் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இவரிடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். தேவர் 2011ஆம் ஆண்டு, கடன் பெற்றுத் தருவதாக கூறி 5 கோடி ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தெலங்கானா காவல் நிலையத்தில் புகார்
எஸ்.ஆர். தேவர், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவராகவும், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திருச்சுழி தொகுதியில் தற்போதைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
இந்நிலையில், லட்சுமி நாராயணனிடம் பணம் பெற்றுக்கொண்ட அவர், லோன் எதுவும் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், லட்சுமி நாராயணன் இது குறித்து தெலங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர்.