தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவில் அடுத்து என்ன? - தெற்கே ஓபிஎஸ், வடக்கே சசிகலா சுற்றுப்பயணம்?!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதேநேரம் சசிகலா திருத்தணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

AIADMK leader
AIADMK leader

By

Published : Jun 26, 2022, 8:07 PM IST

மதுரை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ஓரங்கட்டப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், சசிகலா திருத்தணி உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருத்தணி சென்ற சசிகலாவுக்கு, அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், ஓ.பன்னீர் செல்வம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

மதுரையில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள். கட்சியில் தற்போது நிகழும் பிரச்னைகளுக்கு காரணமானவர்களுக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டால், சசிகலா மற்றும் தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details