தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’அரசு விழாவில் ஸ்டாலின் பெயர்தான் அதிகம் கேட்கிறது’ - சு.வெங்கடேசன்

மதுரை: அரசு விழாவில் ஜெயலலிதா பெயரை உச்சரிப்பதை விட மு.க.ஸ்டாலின் பெயரையே அதிகம் உச்சரிக்கிறார்கள் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

function
function

By

Published : Dec 4, 2020, 12:54 PM IST

மதுரையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பதிவில்,

” மதுரையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா மற்றும் ஒன்றிய அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரை மக்களுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அரசு நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் பங்கெடுத்தேன்.

அரசு விழாக்கள் ஆளும்கட்சியின் விழாக்களாக மாறும் துயரம் என்று நீங்கும் எனத் தெரியவில்லை? ஜெயலலிதா அவர்களின் பெயரை உச்சரிப்பதை விட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரையே அதிகம் உச்சரித்தார்கள். தேர்தல் அச்சம் அலையடிக்கத் துவங்கிவிட்டது ஆளுங்கட்சிக்கு...சிறப்பு! “ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரையின் தாகம் தீர்க்கும் நீண்டநாள் கனவுத் திட்டம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details