மதுரையில் இன்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, மதுரையில் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் தளபதியும், தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சரவணனும் இன்று தங்களது வேட்புமனுக்களை, அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.
மதுரை அதிமுக திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! - அதிமுக திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
மதுரை: தேர்தல் பரப்புரை சுறுசுறுப்படைய தொடங்கிவிட்ட நிலையில், மதுரை அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
rajan sellappa
அதேபோன்று, திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் ராஜன் செல்லப்பா, மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குமரன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: சீமானின் 2ஆம் கட்டப் பரப்புரைப் பயணத்திட்டம் அறிவிப்பு