தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கூடுதல் சிறப்பு ரயில்கள், மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம்
பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள்

By

Published : Jun 18, 2021, 6:38 PM IST

மதுரை:சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தற்போது வெளியூர் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால், மேலும் சில சிறப்பு ரயில்கள் வரும் ஜூன் 20 (ஞாயிற்றுகிழமை) முதல் இயக்கப்பட இருக்கின்றன.

அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில் (தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும்), சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா சிறப்பு ரயில், மதுரை - புனலூர் சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 20 முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன.

அதைபோல, ஜூன் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும்), ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில், மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில், புனலூர் - மதுரை சிறப்பு ரயில் ஆகியவை மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கறும்பட்டை அணிந்து பணியாற்றிய மருத்துவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details