தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டலில் வணிகவரித்துறை சோதனை - அம்மன் உணவகம்

மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் நேற்று(செப்.20) சோதனையில் ஈடுபட்டனர்.

நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டலில் வணிகவரித்துறை சோதனை
நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டலில் வணிகவரித்துறை சோதனை

By

Published : Sep 21, 2022, 12:05 PM IST

திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ’அம்மன்’ என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலத்தில் தொடங்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்க தொடங்கியது.

இதனால் எப்போதும் உணவகங்களில் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்நிலையில், அம்மன் உணவகங்களுக்கு தலைமையிடமாக இருக்கக்கூடிய தெப்பக்குளம் பகுதியில் உள்ள அம்மன் உணவகத்தில் நேற்று(செப்.20) வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழுவினர் சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்பது உறுதியான நிலையில், 3 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஜி.பி.முத்துவுடன் அசுர வேகத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details