தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கட்டண மீட்டரை மாற்றினால் நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரை கிளை - தமிழ்நாடு

ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றினாலோ, அதிக பயணிகளை ஏற்றினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டரை மாற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்
ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டரை மாற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்

By

Published : Jul 29, 2021, 2:37 PM IST

ஆட்டோ, கார்களிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "மதுரையிலுள்ள பெரும்பாலான ஆட்டோக்கள் மோட்டார் வாகன விதியை பின்பற்றுவதில்லை. இருக்கைகளில் அதிகளவில் மாற்றம் செய்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகளவில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். கட்டண மீட்டர் பொருத்துவதில்லை.

அதிகளவு கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு தகுதிச்சான்று வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில், "ஆட்டோ, கார்களில் உள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும். ஏனெனில்,

  • பயணிக்கும் பொதுமக்களிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது.

இதை அந்தந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கும்போது முறையாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

  • மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள்(ஆர்டிஓ) முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மதுரைக்குள்பட்ட பகுதியில் ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டர் முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யாமல் தகுதிச்சான்றிதழ் வழங்கக்கூடாது.

விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதையும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கட்டண மீட்டர் பொருத்தியுள்ளனரா?, அதிக பயணிகள் ஏற்றிச் செல்கிறார்களா?, விதிகள் மீறப்படுகிறதா? என்பதையும் குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் மினி பஸ்களாகவும், மினிபஸ்கள் பஸ்களாகவும் இயக்குவதைத் தடுக்க வேண்டும்.

மேலும்,

  • அதிக பயணிகளை ஏற்றினால் ஓட்டுநர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பான அறிக்கையை அவ்வப்போது, போக்குவரத்து இணை ஆணையரிடம் வழங்க வேண்டும். இவற்றை இணை ஆணையர் கண்காணிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?'

ABOUT THE AUTHOR

...view details