சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள 9 காவலர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டிருந்தது.
சாத்தான்குளம் விவகாரம் - குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்! - 9 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 காவலர்களும் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
case
அதன்படி, வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்வதற்காக, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ், காவலர்கள் சாமத்துரை, வெயில் முத்து, செல்லத்துரை ஆகிய ஒன்பது பேரும் பலத்த பாதுகாப்போடு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: டிஐஜி அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!