மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு செய்துள்ளனர். அதில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விதி முறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2013 முதல் 17 வரை அதிக ஆள் ஏற்றியதாக 27751 மீட்டர் இல்லாமல் இயக்கியதாக 10286 ஆட்டோ சீட் மாற்றி அமைத்து இயக்கியதாக 2354 மேலும் பல்வேறு விதிகளை மீறியது என மொத்தம் 156468
வழக்கு பதிவ பதியப்பட்டது.