மதுரை:நத்தம் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கழுத்தில் தாலியோடு பள்ளிக்கு வருகைதந்துள்ளார். இதனையடுத்து பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்திய சமூகநலத் துறை அலுவலர்கள் பள்ளி மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
இதனையடுத்து சமூகநலத் துறை அலுவலர்களின் புகாரின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், தாலி கட்டிய இளைஞர், அவரது பெற்றோர் மீதும் திருப்பாலை காவல் துறையினர், குழந்தை திருமண தடுப்பு, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.