தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் டெங்கு: 75 பேர் பாதிப்பு - டெங்கு பரவல்

மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மொத்தமாக 75 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரை மாநகரில் மட்டும் 49 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Dengue
Dengue

By

Published : Nov 13, 2021, 10:08 PM IST

மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 40 நாள்களில் 75 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் மதுரை மாநகரத்தை சேர்ந்தவர்கள். டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மட்டும் ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகைமூட்டம் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்துதல், மழை நீர் தேங்கும் பகுதிகளில் எண்ணெய் பந்துகளை போடுவது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேலும் காய்ச்சல் முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட சுகாதார மையங்களில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details