உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான 10 உபகோயில்களின் உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டன.
இதில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, கூடலழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் ராமசாமி, இக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு, வடக்கு சரக ஆய்வாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.