மதுரை:வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தனது 7 வயது மகனுடன் இன்று(நவ.2) அழகப்பன் நகரில் பிரபல துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றுள்ளார். இதையடுத்து அவர் துணிகளை வாங்கிவிட்டு, மகனுடன் கடையின் 5ஆவது மாடியிலிருந்து எஸ்கிலேட்டர் வழியாக இறங்க முயன்றுள்ளார்.
தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற சிறுவன் 5ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த சோகம் - boy fell from the 5th floor in madurai
மதுரையில் தீபாவளி துணி எடுக்க சென்ற 7 வயது சிறுவன் 5ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற சிறுவன் 5ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த சோகம் 7 year old boy fell from the 5th floor in madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13531571-606-13531571-1635860247187.jpg)
அப்போது சிறுவன் எஸ்கிலேட்டரின் பாக்கவாட்டில் உள்ள இடைவெளியில் தவறி விழுந்தார். அப்படி, 5ஆவது மாடியிலிருந்து இருந்து கீழே விழுந்துள்ளார். அருகிலிந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எஸ்கிலேட்டரின் பாக்கவாட்டில் உள்ள இடைவெளியை கடை நிர்வாகம் கவனிக்காமல் விட்டதன் காரணமாக இந்த சம்பவம் நிகழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி