மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரசாதம் தயாரிப்பதற்காக ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை எரிபொருள் தயாரிக்க வழங்குவதற்கான திட்டம் (RUCO) முதல்முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி நேற்று(ஜூலை 26) மட்டும் கோவிலில் பயன்படுத்தப்பட்ட 600 லிட்டர் எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்தது. இந்த எண்ணெய் பயோடீசலாக மாற்றம் செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.