மதுரை பாண்டி கோயில் பூசாரியாக இருந்த கல்மேடு பகுதியைச் சேர்ந்த முத்து ராஜா என்பவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதுகுத்து விழாவில் உறவினர்களுடன் கலந்துகொண்ட போது எதிர்பாராதவிதமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது.
பாண்டி கோயில் பூசாரி கொலை வழக்கில் 5 பேர் சரண்! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம்: மதுரை பாண்டி கோயில் பூசாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர், இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், முத்து ராஜாவை கடந்த 10ஆம் தேதி பாண்டிகோயில் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக ராமநாதபுரம் ஜேஎம்-1 நீதிமன்றத்தில் நீதிபதி ஜெனிதா முன்னிலையில், மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கரண், கெளதம், கோபி, முருகன், பண்டித்துரை ஆகிய ஐந்து பேர் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.