தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜவுளி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 4 பேர் காயம் - ஜவுளி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து

மதுரையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனத்திலுள்ள பாய்லர் வெடித்த விபத்தில் நான்கு பெண்கள் படுகாயமடைந்தனர்.

ஜவுளி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து
ஜவுளி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து

By

Published : Aug 6, 2021, 8:10 PM IST

மதுரைமாவட்டம் விளாங்குடியைச் சேர்ந்தவர் மணிராஜ். இவர், சொந்தமாக ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தில், ஆண்களுக்கான ரெடிமேட் ஆடை ரகங்கள் உற்பத்தி செய்யும் பணியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக உற்பத்திப் பிரிவில் இருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பணியில் இருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மேலும், இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை மீட்ட பணியாளர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் விபத்து - சேரனுக்கு 8 தையல்

ABOUT THE AUTHOR

...view details