துபாயிலிருந்து மதுரைக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
துபாயிலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்! - மதுரை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
மதுரை: துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஆடைக்குள் மறைத்துவைத்து கடத்திவரப்பட்ட சுமார் 98 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல்செய்து இரு பெண்களைக் கைதுசெய்தனர்.
அதைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் சுங்கத் துறை பிரிவினர் மதுரை வந்த பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது மதுரை வந்த திருச்சியைச் சேர்ந்த ஜெயலானி, ஜெயராணி ஆகிய இருவரும் உள்ளாடைக்குள் சுமார் 98 லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ தங்கத்தை மெழுகு போன்று வளையும் தன்மைகொண்டதாக மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து தங்கக் கட்டிகளை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் கைப்பற்றி, தங்கம் கடத்திவந்த இரண்டு பெண்களையும் கைதுசெய்தனர்.