தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுத் தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து தற்கொலை - சோகத்தில் தந்தையும் தற்கொலை முயற்சி

மதுரையில் +2 மாணவன் பொதுத்தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலையால் உயிரிழந்தார்.

மாணவன் சஞ்சய்
மாணவன் சஞ்சய்

By

Published : May 6, 2022, 10:40 AM IST

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட புல்லமுத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனிபாபு-உஷாராணி தம்பதி மகன் சஞ்சய். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த சஞ்சய் , பொதுத் தேர்வு எழுத பயந்து தனது தாய் மாமன் ராஜபாண்டி வீட்டில் , பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். அப்போது சஞ்சயின் அலறல் சத்தத்தை கேட்டு காப்பாற்ற முயன்ற தாய்மாமன் ராஜபாண்டிக்கும் காயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு , மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சஞ்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காப்பாற்ற முயன்றபோது காயம் அடைந்த தாய்மாமன் ராஜபாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவன் சஞ்சய்

தந்தையும் தற்கொலை முயற்சி:மகன் சஞ்சய் இறந்த துக்க தகவலை கேட்டு , சோகத்தில் தந்தை பழனிபாபும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் இறந்த சோகம் தாளாமல் தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புல்லமுத்தூர் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க:நடக்க முடியாத நிலையிலும் சாதிக்க துடித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் ’சிந்து’

ABOUT THE AUTHOR

...view details