மதுரை ரஸ் பவுண்டேஷன் காப்பகத்தின் நிறுவனர் பெர்லின் ஜோஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை சத்திரப்பட்டி அருகே காப்பகம் நடத்தி வருகிறேன். எனது காப்பகத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 18 சிறுவர், சிறுமிகள் தங்கி படித்து வந்தனர்.
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் தள்ளுபடி! - 11 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
மதுரை: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைதான தனியார் காப்பக நிறுவனரின் பிணைக்கான மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன், எனது காப்பகத்தில் தங்கியிருந்த 11 வயது சிறுமி என்னால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக என் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் நான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மேலும் நான் மதுரை மகிளா நீதிமன்றத்தில் பிணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 22 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் அவதிப்பட்டு வருகிறேன். எனவே எனக்குப் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதனையடுத்து காப்பகத்தின் நிறுவனர் பெர்லின் ஜோஸ், பிணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.