தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்ஸ்டாகிராம் காதல்...11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது - Perundurai All Women Police Force

ஈரோட்டில் இன்ஸ்டாகிராமில் பழகி 11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 12, 2022, 10:20 AM IST

ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 11 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் சேலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற இளைஞரிடம் பழகி வந்துள்ளார்.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து, காதலன் ரங்கநாதன் வீட்டிற்கு பதினொன்றாம் வகுப்பு மாணவி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, மாணவியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாணவி இன்ஸ்டாகிராமில் பழகிய சேலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற இளைஞர் உடன் சென்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை மீட்டனர். சிறுமியை திருமணம் செய்த ரங்க நாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெங்களூரில் நட்சத்திர ஆமைகள் விற்க முயன்ற கும்பல் கைது..

ABOUT THE AUTHOR

...view details