தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தைப்பூசத் தேரோட்டத்தில் கூடிய மக்கள் திரள் - தொற்று அதிகரிக்கும் அபாயம்! - முருகன் கோயில்

ஈரோடு அருகே கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமல் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றதால் நோய்ப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Jan 18, 2022, 11:06 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கொண்டயம்பாளையம் கிராமத்தில் பொன்மலை ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதற்காகச் சிறிய மற்றும் பெரிய என இரண்டு தேர்கள் வடிவமைக்கப்பட்டு சிவன், சக்தி, முருகன் ஆகிய சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கரோனா கட்டுப்பாடுகளற்ற தைப்பூச விழா

தைப்பூச விழாவையொட்டி, மூலவருக்கு மகா அபிஷேகம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வள்ளி,தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நோய்த்தொற்று காரணமாகத்தடுப்பு வழிகளைப் பின்பற்றி ஜேசிபி இயந்திரம் மூலம் தேர் இருப்பதாக அறிவித்தும், பின்னர் பக்தர்கள் தேரை இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது தாரை தப்பட்டை முழங்க ஆண்கள், பெண்கள் எனப் பலர் முகக்கவசம் அணியாமல் குத்தாட்டம் போட்டு கோலாகலமாகக் கொண்டாடியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோயில் திருவிழாவில் காவல்துறையின் பாதுகாப்பின்மை

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற விழாவில், ஒரு காவலர்கூட பாதுகாப்புப் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா தொற்று வேகமாகப் பரவும் வேளையில், சமூக விலகல் இல்லாமல் நடந்து, இந்தக் கோயில் விழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தைப்பூசத் தேரோட்டம்
இதையும் படிங்க:1 கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி : ஊரடங்கு காலத்தில் போட்டி நடத்திய 40 பேர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details