தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை மறித்த காட்டு யானை

சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை, வெகுநேரம் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

By

Published : Jul 2, 2022, 7:36 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் காட்டு யானைகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதும், சாலையோரம் நின்றபடி இருப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 2) சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு காட்டு யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி, சாலையின் நடுவே நின்றபடி தீவனம் உட்கொண்டது. இதனால் வாகனவோட்டிகள் வாகனத்தை நிறுத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

இதன் காரணமாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் சாலையின் நடுவே நின்றிருந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

இதையும் படிங்க:"தம் பிரியாணி, இரானி தேனீரை சுவைக்க மறக்காதீர்கள்" - பாஜக தலைவர்களை கலாய்த்த கே.டி. ராமாராவ்!

ABOUT THE AUTHOR

...view details