சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வன கால்நடை மையத்தில் அரிய வகை உயிரினமான மரநாய்க்குட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரநாய்க்குட்டியை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, காராச்சிக்கொரை வன கால்நடை மையத்தில் ஒப்படைத்தனர்.
பிறந்த சில மாதங்களே ஆன மரநாய்க்குட்டியை, கால்நடை மைய மருத்துவர்கள், உதவியாளர்கள் பராமரித்து வருகின்றனர். மரங்களில் வாழும் தன்மை உடைய மரநாய்கள், தென்னை மரங்களில் முகாமிட்டு, தென்னை மரங்களில் உள்ள இளநீரை தனது கூரிய பற்களால் துளை போட்டு குடிக்கும் பழக்கம் உடையது. இரவில் மட்டும் இரை தேடும் பழக்கம் உடைய இந்த மரநாய்க்குட்டிகள் எளிதில் மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாது.