தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானைகள் நடமாட்டம்: சத்தியமங்கலம் பகுதியினருக்கு எச்சரிக்கை

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல  சத்தியமங்கலம் வாசிகளுக்கு எச்சிரிக்கை
ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல சத்தியமங்கலம் வாசிகளுக்கு எச்சிரிக்கை

By

Published : Dec 21, 2020, 6:30 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீர் தேடி பவானிசாகர் அணை வரை வந்துவிட்டன. மேலும் அணைக்கு அருகாமையில் உள்ள புங்கார் கிராமத்தில் தற்போது யானகைள் முகாமிட்டுள்ளன.

புங்கார் கிராம வாசிகள் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். தற்போது அப்பகுதியில் யானகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், யாரும் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகாதபடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

குளத்தில் மீனவர் சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details