ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி பவானிசாகர் கலந்துகொண்டு அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”முதலமைச்சர் உத்தரவின் பேரில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனப்பகுதிகளில் விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் மற்றும் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து கருத்து வேறுபாடு உள்ள இருதரப்பு விவசாயிகளும் சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டும்.