தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது - ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்

ஈரோட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 12, 2022, 7:11 PM IST

ஈரோடு:மசாஜ் சென்டரில் வேலைக்கென அழைத்து வந்த இளம்பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் நடத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்ததோடு, அப்பெண்கள் மூவரையும் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஓடப்பள்ளியைச்சேர்ந்த குமரன் என்பவர் நேற்று (செப்.11) இரவு ஈரோடு காளைமாடு சிலை ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், அங்கு 3 இளம்பெண்கள் உள்ளதாகவும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞருடன் மசாஜ் சென்டருக்கு குமரன் சென்றபோது, அங்கு 3 இளம் பெண்கள் இருந்துள்ளனர். தனி அறைக்குள் அழைத்துச்சென்ற அப்பெண்கள், தங்களை மசாஜ் சென்டரில் வேலை என்று அழைத்து வந்து, தற்போது பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருவதாகவும், தங்களை எப்படியாவது மீட்டுச்செல்லும்படி அவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து வருவதாகக் கூறி, வெளியே சென்ற குமரன் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்

ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட போலீசார் மசாஜ் சென்டரில் ரெய்டு நடத்தினர். அப்போது டெல்லி, ஹரியானா மற்றும் சேலத்தைச்சேர்ந்த 3 இளம்பெண்களை மீட்டதோடு மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்துவந்த வந்த ஈரோடு, மோளகவுண்டன்பாளையம், பாலதண்டாயுதம் வீதியைச் சேர்ந்த கேரளா மாநிலத்தைப்பூர்வீகமாக கொண்ட ஜிபு, சிஜோ ஆகிய இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். இளம் பெண்களை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு போலீசார் நடவடிக்கை

இதையும் படிங்க: நடிக்க வைப்பதாக கூறி ஆபாச போட்டோ எடுத்த விவகாரம்...வாக்குமூலம் கொடுத்த போலி இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details