ஈரோடு: பவானி அடுத்த ஜம்பை பகுதியை சேர்ந்த நந்தகோபால், சக்திவேல் ஆகிய இருவர் சாலையோர கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது ஆப்பக்கூடலில் இருந்து அதிவேகமாக வந்த கார் சாலை ஓரத்தில் நின்றிருந்த இருவர் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் நின்றவர்கள் மீது கார் மோதியதில் இருவர் படுகாயம் காரை ஓட்டி வந்த நபரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிடித்து விசாரித்ததில் அவர் இந்திரா நகரை சேர்ந்த அர்த்தனாரீஸ்வரர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு பெருகும் ஆதரவு... திடீர் போஸ்டரால் பரபரப்பு