ஈரோடு நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற மோகன்குமார், சுரேந்திரன் ஆகிய இருவரும் தாங்கள் தின காற்று என்ற பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர்கள் என தலைமைக் காவலரிடம் அறிமுகமாகியுள்ளனர்.
பின்னர் அவர்கள் காவல் நிலைய உள்பகுதியில் அனுமதியின்றி செல்போனில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கேட்ட தலைமை காவலர் செந்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.