ஈரோடு: பெருந்துறையில் உள்ள பணிக்கம்பாளையம் கேஸ் குடோன் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்த காவலர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் முஜாம்மண்டல், இபாதுல் அலி என்பதும், வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக ரயில் மூலம் இங்கு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களுடன் ஜஹங்கர், ஆதாஸ் ஆகிய இரண்டு பேரும் இங்கு வந்து, தற்போது தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.