தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமியை கர்ப்பமாக்கிய டியூசன் ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது - Tuition teacher arrested for making girl pregnant

அந்தியூரில் டியூசன் படிக்கவந்த சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

sdf
asdf

By

Published : Jan 7, 2022, 10:45 PM IST

ஈரோடு:அந்தியூர் பர்கூர் சாலையில் டியூஷன் நடத்திவந்தவர் லோகநாதன். இவர் தன்னிடம் டியூஷன் படிக்கவந்த 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் லோகநாதனை டிசம்பர் 4ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 7) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின்பேரில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லோகநாதன் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க: பச்ச கல்லு மூக்குத்தி பாடகிக்கு வந்த மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details