தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திம்பம் மலைப்பாதையில் 16.2 டன் சரக்கு வாகனங்கள் செல்ல தடை

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் 16.2 டன்னுக்கும் அதிகமாக உள்ள சரக்கு வாகனங்கள் வருவதற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திம்பம் மலைப்பாதையில் 16.2 டன் அதிகமாக உள்ள சரக்கு வாகனங்களுக்குத் தடை: நீதிமன்றம் உத்தரவு
திம்பம் மலைப்பாதையில் 16.2 டன் அதிகமாக உள்ள சரக்கு வாகனங்களுக்குத் தடை: நீதிமன்றம் உத்தரவு

By

Published : Apr 9, 2022, 3:32 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 16.2 டன்னுக்கு அதிகமாக உள்ள சரக்கு வாகனங்கள் நேற்றிலிருந்து(ஏப். 08) தடுத்து நிறுத்தப்பட்டது. பால்வண்டி, சிமெண்ட, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் பாரம் ஏற்றிய லாரிகள் என 12 சக்கரங்கள் கொண்ட லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன.

வனத் துறையினர் சரக்கு வாகனத்தின் பில்படி அதில் உள்ள எடையை பார்த்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

ஓட்டுநர்கள் கருத்து

இதனால் பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன. மேலும் கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு லாரிகளை அனுமதித்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று இரவு முதல் இரவுநேர அரசு பேருந்துகள் இயக்கம் ரத்து செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை இயக்கப்பட்டுவந்த பொதுபோக்குவரத்தும் நேற்று தடைவிதிக்கப்பட்டதால், இலகுரக வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை சேவைக்கு தடை இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: '6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சி பட்ஜெட்'

ABOUT THE AUTHOR

...view details