தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’வீணாகும் மூங்கில் மரங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ - பழங்குடியின மக்கள் கோரிக்கை - மூங்கில் மரங்கள்

சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வீணாகும் மூங்கில் மரங்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடியின மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீணாகும் மூங்கில் மரங்களை பயன்படுத்த அனுமதிக்க பழங்குடியினர் கோரிக்கை
வீணாகும் மூங்கில் மரங்களை பயன்படுத்த அனுமதிக்க பழங்குடியினர் கோரிக்கை

By

Published : Jul 28, 2021, 4:42 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி ஆயிரத்து 411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அடர்ந்த வனப் பகுதியாகும். இந்த புலிகள் காப்பக வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளன.

புல் வகையைச் சேர்ந்த மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளான பின் மூங்கிலரிசி பூத்து மரத்தின் ஆயுட்காலம் முடிந்து விடுவதால் அப்படியே காய்ந்து வனப்பகுதியில் மக்கி மண்ணாகிவிடுகிறது. மூங்கில் மரங்களிலிருந்து கூடை, ஏணி, நாற்காலி உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருள்களும் தயார் செய்யப்படுகின்றன.

வீணாகும் மூங்கில் மரங்கள்

சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக இந்த வனப்பகுதியில்வீணாகும் மூங்கில் மரங்களை இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் ஆயுட்காலம் முடிந்து காய்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் ஏற்படும் காட்டுத்தீ காரணமாக காய்ந்த மூங்கில் மரங்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகின்றன.

2006 வன உரிமைச் சட்டம்

இந்நிலையில், 40 ஆண்டுகளைக் கடந்து வீணாகும் மூங்கில் மரங்களை வனப்பகுதியிலுள்ள கிராமங்களில் வசிக்கும் தாங்கள் எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என பழங்குடி மக்கள் வனத்துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்து, பயனில்லாமல் சோர்ந்து போய் உள்ளனர்.

மேலும், 2006 வன உரிமைச் சட்டத்தில் வனப்பொருள் சேகரிப்பில் பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் வீணாகும் மூங்கில் மரங்களை சேகரித்துக் கொள்ளலாம் என விதிமுறை உள்ளதாகவும், எனவே வன உரிமைச் சட்டத்தின்படி ஆயுட்காலம் முடிந்த மூங்கில் மரங்களை பழங்குடியின மக்கள் எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை'

ABOUT THE AUTHOR

...view details