தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அண்டை மாநிலத்திற்கு அரிசி கடத்திய 6 பேர் கைது

திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்திய ஆறு நபர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து வாகனத்தையும் அரிசியையும் பறிமுதல்செய்தனர்.

அண்டை மாநிலத்திற்கு அரிசி கடத்திய ஆறு பேர் கைது
அண்டை மாநிலத்திற்கு அரிசி கடத்திய ஆறு பேர் கைது

By

Published : Jan 30, 2020, 7:12 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் ஆர்.கே. பேட்டை அருகே எஸ்.வி.ஜி. புரம் சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் சிறப்புப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவை நோக்கிச் சென்ற சுமோவை ஆய்வுசெய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் 50 கிலோ எடைகொண்ட 13 அரிசி மூட்டைகள் சுமோவுடன் பறிமுதல்செய்த காவல் துறையினர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தூங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுமோ ஓட்டுநர் கோகுலை கைதுசெய்தனர். மேலும் தப்பிச் சென்ற சுமோ உரிமையாளரைத் தேடிவருகின்றனர்.

திருத்தணியில் ரேஷன் அரிசி கடத்தல்

இதேப்போன்று ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கோவைப் பிரிவில் ஈரோடு உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது லாரி ஒன்றில் 12 டன் ரேசன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

கோபியில் ரேஷன் அரிசி பறிமுதல்

இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல்செய்த காவல் துறையினர் இது தொடர்பாக சாம்சன், ரமேஷ், தாமோதரன் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைதுசெய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதையும் படிங்க:

‘ஆபாச படமா... கட்டங்கட்டி தூக்குவோம்’ - போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details