ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அரிகியம் கிராமத்தில் சர்க்கரை மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா கடந்த 22ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாதேஸ்வரனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் கோயிலில் காப்பு கட்டி வரம் கேட்டல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் முன் இன்று (மே 25) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பூசாரி குண்டம் இறங்கி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பழங்குடியினர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு பின் பாரம்பரிய நிகழ்ச்சியான கெட்டது விலகி, நல்லது நடக்கும் என பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.