தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 2, 2019, 12:24 PM IST

ETV Bharat / city

பாரம்பரிய நாய்கள் கண்காட்சி... பார்வையாளர்கள் பிரமிப்பு..!

ஈரோடு: மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்ற பாரம்பரிய நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாரம்பரிய நாய்கள் கண்காட்சி

ஆதிவனம் ஜல்லிக்கட்டு பேரவை, சிறகுகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஈரோடு அருகேயுள்ள பவளத்தாம்பாளையத்தில், தமிழ்நாடு பாரம்பரிய நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். இதில் ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை போன்ற பாரம்பரிய இன நாய்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பாரம்பரிய நாய்கள் கண்காட்சி

வெளிநாட்டு நாய்களின் வரவால் அழிந்து வரும் பாரம்பரிய இன நாய்களைப் பாதுகாப்பது, குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஈரோட்டில் முதன் முறையாக நடத்தப்படும், பாரம்பரிய நாய்கள் கண்காட்சி தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த கண்காட்சியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details