தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதி தாளவாடி அருகே உள்ள குண்டல்பேட்டைச் சேர்ந்தவர் சிவமல்லாப்பா. இவர் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் சிவமாதப்பா மாடு மேய்க்க சவடஹள்ளி வனப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு! - sathiyamanakalm
ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, மாலை ஆனதும் மாடுகள் வீடு திரும்பிய நிலையில், சிவமல்லாப்பாவை காணவில்லை. அதனால் அவரது உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். பின்னர் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிவமல்லாப்பா சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து, அவர் அங்கு மாடு மேய்த்துகொண்டிருக்கும் போது புலி அவரைத் தாக்கி கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், ஆட்களை கொல்லும் புலியை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.