ஈரோடு: நீலகிரி மாவட்ட வனக் கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள தெங்குமரஹடா கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள 30 விழுக்காடு புலிகளின் நடமாட்டப்பகுதியாகவும், வனவிலங்குகளின் இனப்பெருக்க பகுதியாகவும் உள்ளதால், அங்குள்ள மக்களை இடம் மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் இணை இயக்குநர் கிருபா சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெங்குமரஹடா கிராம மக்களை இடமாற்றம் செய்வது குறித்து மார்ச் 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தெங்குமரஹாடா மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்கள், முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர்கள் ஆகியோர் அடங்கிய உயர் அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.