தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தெங்குமரஹாடா மக்கள் மறு குடியமர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் - tribal people in erode district

தெங்குமரஹாடா மக்கள் சமவெளி பகுதிக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதால் அரசு அலுவலர்கள் மறு குடியமர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் தெங்குமரஹாடாவில் நடைபெற்றது.

Thengumarahada people request to government
Thengumarahada people request to government

By

Published : Feb 15, 2022, 1:33 PM IST

ஈரோடு: பவானிசாகர் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட தெங்குமரஹாடாவில் வசிக்கும் 750 குடும்பங்களில் 350 பேர் குடும்பங்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

தெங்குமரஹாடாவுக்குச் செல்லும் வழியில் மாயாறு ஓடுகிறது. இக்கிராம மக்கள் மாயாற்றை பரிசலில் கடந்து செல்வது வழக்கம். மாயாற்றில் வெள்ளப்பெருக்கின்போது கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும்.

திம்பம் போலாகுமா தெங்குமரஹாடா?

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அடுத்தகட்டமாக தெங்குமரஹாடாவிலும் போக்குவரத்து தடை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெங்குமரஹாடா மக்கள் மறு குடியமர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டம்

இதனால், தெங்குமராஹாடா மக்கள் சமவெளி பகுதிக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அவர்களை மறு குடியமர்வு செய்வதற்கு மக்கள் கருத்துக்கேட்கும் கூட்டம் தெங்குமரஹாடா அரச உயர்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 13) நடைபெற்றது.

12 பேர் கொண்ட குழு

இதில் அரசு தரப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். கிராம மக்கள் சார்பில் ஊராட்சித் தலைவர் சுகுனா மனோகரன், ஊராட்சி செயலாளர் முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

கிராம மக்களின் கருத்துகளை வீடு வீடாகச் சென்று பதிவு செய்வதற்கு மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணியை தொடங்கியுள்ளனர். விரும்பம் உள்ள கிராம மக்கள் ஆதார் அல்லது ரேசன் கார்டு நகலை இணைத்து ஈரோடு அல்லது கோயம்புத்தூர் மாவடட்த்தில் மறு குடியமர்வுக்கான விருப்பத்தை எழுத்து மூலமாக தெரிவிக்க அறிவுறுத்தினர்.

இந்த மறுகுடியமர்விற்கான நடவடிக்கையில் நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்களை முன்னின்று வழிநடத்திச் செல்ல ஊர்மக்களில் 12 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தெங்குமரஹாடாவில் வசிக்கும் பழங்குடியினர் அல்லாத சுமார் 400 குடும்பங்களை புலிகள் காப்பகத்திற்குள் இருந்து வெளியே மறு குடியமர்வு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவும், அதற்காக அங்கு வசிக்கும் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி மார்ச் 14ஆம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details