கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோபி, பவானி, அந்தியூா், பவானிசாகா் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளைச்சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். அப்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான கண்டன ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பினாா்.
பிரச்சார மேடையிலேயே கட்சித் தொண்டர் ஒருவரின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், பின்னர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “அமைச்சர் கருப்பணனின் உதவியாளர் வேலைக்காக லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகியுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனின் கல்வித்துறை எப்படி நடக்கிறது என்பதை நாடறியும். எடப்பாடி பழனிசாமி பல்டி பழனிசாமி என்றால், செங்கோட்டையன் அந்தர் பல்டி செங்கோட்டையன். சத்துணவு முட்டை, பிளிச்சிங் பவுடர், கரோனா கிட் என அனைத்திலும் ஊழல்.
அம்மா மினி கிளினிக் என்ற பெயரில் பழைய கட்டடத்திற்க்கு பெயிண்ட் அடித்து திறப்பதற்கு பதில், ஏற்கனவே உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி போதிய மருத்துவர்களை நியமிக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படும். சொல் புத்தியும் இல்லாத, சுய புத்தியும் இல்லாத முதலமைச்சர், தனது சொந்த தொகுதிக்கு மட்டும் அதிகளவு நிதியை பெறுகின்றார்.
பிரச்சார மேடையிலேயே கட்சித் தொண்டர் ஒருவரின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின் முதலமைச்சருக்கு அருந்ததியர் மக்கள் மீது ஏன் திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது? மேடையில் நான் தலை நிமிர்ந்து நிற்க காரணமே அருந்ததியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததால் தான். மத்திய அரசின் வரியால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. மத்திய அரசு மக்களை சாட்டை வைத்து அடிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: ‘நான் மந்திரவாதி அல்ல செயல்வாதி’ -முதலமைச்சர் சூளுரை