ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகேயுள்ள தெங்குமரஹாடா கிராமத்தின் நடுவே மாயாறு பாய்ந்தோடுகிறது. இந்த ஆறானது பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடாவுக்கு இடையே செல்வதால் கிராம மக்கள் பரிசல் மூலமாகவே ஆற்றை தாண்டிச் செல்வார்கள்.
ஆகையால், இக்கிராமத்திற்குச் செல்ல பரிசல் பயணம் தான் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. தற்போது ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கால் பரிசலை இயக்க முடியாமல் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வேறு போக்குவரத்து வசதி இல்லாததால் தெங்குமரஹாடா கிராம மக்களின் விவசாயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிப்படைந்துள்ளன.