தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு - இந்து சமன அறநிலையத்துறை

தனியாரிடமிருந்த இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 10.25 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டது.

10.25 ஏக்கர்
10.25 ஏக்கர்

By

Published : Sep 4, 2021, 11:18 AM IST

ஈரோடு: அந்தியூர் அருகேவுள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோயில், சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கரிய காளியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இக்கோயில்களுக்குச் சொந்தமாக சுமார் 70 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சுமார் 12.40 ஏக்கர் நிலத்தை அப்பகுதியிலுள்ள ஆறு பேர் ஆக்கிரமிப்புச் செய்ததோடு அதனைத் தங்களது பெயரில் பட்டா மாறுதல் செய்தனர். இதனையறிந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆறு பேர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

கோயில் நிலம் மீட்பு

அதில் தீர்ப்பு வழங்கப்பட்டு 10.25 ஏக்கர் திருக்கோயில் நிலம் சுவாதீனம் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

10.25 ஏக்கர்

இதனையடுத்து இன்று (செப்டம்பர் 4) இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையிலான அலுவலர்கள், அந்தியூர் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் காவல் துறையினர் பாதுகாப்போடு கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு, அங்குத் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் எனப் பலகையும் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:ரூ.3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய்த் துறை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details