தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி குறித்த தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை இயக்குநர் சுந்தரேஸ்வரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்குத் தரமான விதை உற்பத்தி குறித்து தொழில் நுட்பப் பயிற்சி அளித்தார். முன்னதாக வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் துவரை, மஞ்சள், நெல்லி, நெல், பயிறு வகைகள் உள்ளிட்டவை குறித்த கண்காட்சி நடைபெற்றது.