தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாழை மரம் கட்டி தேங்காய் உடைத்து டாஸ்மாக் கடை திறப்பு! - டாஸ்மாக்

தமிழ்நாட்டின் பல இடங்களில் மதுபானக் கடைகள் முன்பு மாலை தோரணம், வாழை மரம் கட்டி அலங்கரிக்கப்பட்டன. மேலும், தேங்காயில் சூடம் கொளுத்தி வெடலை போட்டு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறந்தனர்.

tamilnadu tasmac reopen celebrations
tamilnadu tasmac reopen celebrations

By

Published : May 16, 2020, 8:16 PM IST

உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று மீண்டும் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு அதன்மூலம் மதுபானங்கள் கொடுக்கப்பட்டன.

சரியாக காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை முன்பு மாலை தோரணம் கட்டி வாழை மரத்தால் அலங்கரித்து தேங்காய் உடைத்து டாஸ்மாக் கடையைத் திறந்த சம்பவம் மது பிரியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும், தேங்காயில் சூடமேற்றி அதை உடைத்து மங்களகரமாக கடையை திறந்தனர். இதை கவனித்த மதுப் பிரியர்கள், உற்சாகத்துடன் மதுவாங்கிச் சென்றனர். தென்காசி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை படுஜோராக நடந்தது.

இதேபோல ஈரோடு மாவட்டத்தில், இன்று காலை 10 மணிக்கு அரசு மதுபானக் கடை திறக்கப்படுவதை உறுதிசெய்து கொண்ட 500க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள், கடை திறக்கும் முன்னரே குடையுடனும், சமூக இடைவெளியுடனும் நீண்ட நெடுந்தூரம் காத்திருந்து தங்களுக்குத் தேவையான மதுபானப் பாட்டில்களை பெற்றுச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details