தமிழ் ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு மாநகரில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ அரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு, சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஈரோடு: தமிழ் ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு மாநகரில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோயில் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அரசு அறிவித்துள்ள முகக் கவசம், சானிடைசர், தகுந்த இடைவெளி உள்ளிட்ட அம்சங்களுடன் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
திருக்கோயிலில் தமிழ் ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு அதிகாலை கோயில்களில் திருநடை திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை, விஸ்வரூப தரிசனமும் தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக கோயில் கொடிமரம் முன்பு தமிழ் ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு மந்திரங்களுடன் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பக்தர்கள், தொடங்கியுள்ள இந்தத் தமிழ் புத்தாண்டு சிறப்பாகவும், இனிப்பாகவும் அமைய முக்கனிகளைக் கொண்டு பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
இதேபோல ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், பண்ணாரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் பக்தர்கள் சாமி தரிசனம்செய்தனர்.