தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Merit: விவசாயி மகளுக்கு ரூ.3 கோடி உதவித்தொகை: சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு

Merit: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படிக்க ரூ.3 கோடி மதிப்புள்ள உதவித்தொகையைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

ஸ்வேகா சாமிநாதன்
ஸ்வேகா சாமிநாதன்

By

Published : Dec 24, 2021, 8:42 PM IST

Merit: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் புலவன்காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் ஸ்வேகா சாமிநாதன்.

கல்வியறிவும், விடா முயற்சியும் இருந்தால் ஒருவர் என்ன சாதனை வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்னும் கூற்றை ஸ்வேகா சாமிநாதன் உண்மையாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தில், தனது 14 வயது முதல் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார், ஸ்வேகா சாமிநாதன். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியாலும் தனது புத்திக் கூர்மையாலும் அங்கு படிக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார்.

மாணவி ஸ்வேகா சாமிநாதன் பல சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார். இவற்றைக் கருத்திற்கொண்டு மாணவிக்கு 3 கோடி ரூபாய் உதவித்தொகை கிடைத்துள்ளது.

ரூ.3 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவில் படிக்க இருக்கும் மாணவி

தனது குடும்பத்திலிருந்து முதல் முறையாக கல்லூரிக்குச் செல்லும் முதல் தலைமுறை பட்டதாரியான ஸ்வேகா சாமிநாதன், தனது இளங்கலை பட்டத்தையே சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயில இருப்பதன் மூலமாக பல ஏழ்மை நிலையிலும், நடுத்தர வர்க்கத்திலும் இருக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:CBSE First term exams cheating Issue: சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடா? ரத்து செய்ய மத்திய கல்வி அமைச்சருக்குப் புகார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details