தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு - எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு

ஈரோடு: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்து எஸ்டிபிஐ (SDPI) கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈரோட்டு காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு - எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு - எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

By

Published : Aug 5, 2020, 7:01 PM IST

ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா அயோத்தியில் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்து ஈரோடு கருங்கல் பாளையம் காந்தி சிலை அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் லுக்மான் தலைமையில், 100க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பாபர் இடத்தில் ராமர் கோயில் கட்டக்கூடாது, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். எஸ்டிபிஐ கட்சியினரின் போராட்டத்தையொட்டி சம்பவ இடத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details