தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறு வணிக கடனுதவி - அம்மா உணவக ஊழியர்கள்

கோபிசெட்டிபாளையம் அம்மா உணவகத்தில் உள்ள பணியாளர்களுக்கு கரோனாவையொட்டி சிறு வணிக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறு வணிக கடனுதவி
அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறு வணிக கடனுதவி

By

Published : Jun 25, 2021, 8:01 PM IST

ஈரோடு: மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்த மாவட்டத்தில் சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், தொழில்முனைவோருக்கும் பயனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று கடனுதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் அம்மா உணவகத்தில் உள்ள பணியாளர்களுக்கு கரோனாவையொட்டி சிறு வணிக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்துகொண்டு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details