ஈரோடு: கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் மலர் நகரில் இசபெல்லா ஜான்சிராணி என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தலைமையாசிரியர் பணியாற்றி வருகிறார். . இந்நிலையில் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இசபெல்லா ஜான்சிராணி உள்ளே சென்று பார்த்த போது, 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 65 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.